எமது திருச்சபை பற்றிய அறிமுகம்:

கிருபை வேதாகம சபை இலங்கையில் கர்த்தரைச் சேவிக்கும்படி முயல்கின்ற ஒரு தனித்துவமான சபையாகும். இது வெள்ளவத்தையில் உள்ள இராஜசிங்க வீதியில் அமைந்துள்ளது. நாம் வாழும் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும்; தேவைகளுக்கும் சுவிசேஷ சத்தியத்தின் நற்செய்தியைப் பிரயோகிக்க முயலுகின்ற ஒரு வேதபூர்வமான சபையாயிருப்பதே எமது விருப்பமாகும். நாம் புதிய ஏற்பாட்டு புத்தகமான கலாத்தியரிற் கூறப்பட்ட விதமாக உண்மையான ஒற்றுமையைக் காட்டக்கூடியதுவும் தேவையிலிருக்கும் அனைவருக்கும் ஊழியம் செய்யவல்லதுமான பல சமூகங்கள் இணைந்த சமுதாயமாக உருவாக்கப்பட்டமைக்குத் தேவனை ஸ்தோத்தரிக்கிறோம். கலாத்தியர் 3:28 --யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லைஇ அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

உங்களை ஜெபத்துடன் கரிசனைசெய்யும்படி அழைக்கிறோம்!

எமது சுற்றுப்புறமும் சபை இயல்பும்

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை எங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் அப்பியாசிக்க முயற்சிக்கின்ற இந்த சமூகத்திற்கு உங்களை வரவேற்கிறோம். நாம் அதை முழுமையை அடைந்துவிட்ட ஒரு பரிபூரண திருச்சபை என்று கூறமுற்படவில்லை. அவரது கிருபை மற்றும் வல்லமையினால், நமக்காக தம் உயிரையே அர்ப்பணித்த எமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை நேசிப்பதோடு‚ அவர் கட்டளைப்படியே அவர் நம்மை நேசிச்த வண்ணமாக எமது அயலவர்களையும் நேசிக்க முயலுகின்றோம்.

மாறாகஇ நாம் எமது பலத்தினாலல்ல‚ எங்களை அழைத்தவருடைய அழைப்பினாலும் பராமரிப்பினாலும்; அந்த இலக்கை நோக்கி முன்செல்லுகிறௌம் என்று மாத்திரம் கூறவிரும்புகிறோம்.

நாம் இருளில் இருந்தோம்‚ சுயநலம் மிக்கவர்களாயிருந்தோம்‚ மற்றும் இந்த உலகின் பலவித கவர்ச்சிகளினாலும் ஈர்க்கப்பட்டிருந்தோம். ஆனால் இப்போழுதோ நாம் பாவத்திற்க்கு அடிமைகள் அல்ல. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் எங்களை விடுவித்துவிட்டது. எமக்கு நம்பிக்கையையும் சமாதானத்தையும் வாழ்வின் உண்மை அர்த்தத்தையும் புரியவைத்த இந்த மேன்மையான அனுபவத்தை நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். கிருபை வேதாகம சபையின் கோட்பாட்டு நிலை

கிருபை வேதாகம சபை அதன் பெயரிலேயே அதன் கோட்பாட்டு நிலையை சுருக்கிக் கூறுகிறது.

வேதாகமத்தில் வெளிப்படுத்தியுள்ள தெய்வீக கிருபையின் கோட்பாடுகளை நாம் விசுவாசித்தும் பிரசங்கித்தும் வருகிறௌம் என்பதையே “கிருபை” குறிக்கிறது. இதன்மூலம் நாம் புரட்டஸ்தாந்து சீர்திருத்த பாரம்பரியத்தை உறுதியாகப் பற்றியிருக்கிறோம்.

கர்த்தரின் வார்த்தையாகிய வேதாகமமே ஒருவரது விசுவாசத்திற்கும் நடைமுறைக்கும் போதுமானது. அதையே நாம் உறுதியாகப் பற்றிக்கொண்டிருபதையே “வேதாகம” எனும் சொல் அறியத்தருகின்றது. பரிசுத்த வேதாகமம் மற்றும் உள்ளூர் சபையின் தன்னாட்சி உரிமை‚ அதன் சுதந்திர நிலை‚ மறுபிறப்படைந்த சபை அங்கத்துவம் ஆகியவற்றை நாம் மிக மேன்மையாகக் கருதி கனப்படுத்துகிறோம். அத்துடன் ஒருவரது மறுபிறப்பை வெளியரங்கமாக அறிக்கையிடுவதற்கு முழுக்கு ஞானஸ்நானத்தைக் கைக்கொள்ளுகிறோம்.

எங்கள் வரலாறு

கர்த்தரின் கிருபையால்‚ கிருபை வேதாகம சபை (“கிரேஸ்" என அழைக்கப்பட்ட) 1977இல் ஒரு விசுவாசிகள் ஐக்கியமாக ஆரம்பிக்கப்பட்டது. இது ஆர்வமுள்ள விசுவாசிகளுக்கு வேதாகமப் படிப்பினைகளை விளக்கி எடுத்துச் சொல்லும் நோக்குடன் ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் கூடும் ஒரு வேதப்படிப்பே பின்னர் சபை உருவாக வழிவகுத்தது. எவ்வாறெனில்‚ இவ்வேதாகமப் படிப்பில் நாளடைவில் அதிக விசுவாசிகள் கலந்துகொள்ளத் தொடங்கினர்; மனந்திரும்பிக் கர்த்தரை ஏற்றுக்கொள்பவர்களின் தொகையும் படிப்படியாக அதிகரித்தது. எனவே‚ கர்த்தரின் பணியும் பெருகி வளர்ந்தது.

Church pic

கர்த்தரின் கிருபையால்இ 1978ஆம் ஆண்டு‚ தை மாதம் 22ஆம் திகதி‚ ஞாயிறு அன்று‚ விசுவாசிகளின் இவ் ஐக்கிய அமைப்பானது தற்போது உள்ள வளாகத்தில் ஆனால் வாடகைக்கு அமர்த்தி அதில் தனது முதலாவது ஆராதனையை நடாத்தியது. 1984 ஆம் ஆண்டு இதே இடத்தை எமக்குச் சொந்தமாகப் பெற்றுக்கொள்ளக் கர்த்தரே எமக்குத் துணை புரிந்தார். அத்துடன் கர்த்தர் தாமே தொடர்ச்சியாகத் தமது பணியை எமது சபையில் மேலும் செழுமையாக்கினார். தேவனுடைய நேரத்தின்படியும் அவரது பராமரிப்பின்படியும் அந்தப் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு அதன் இடத்தில் தற்போது உள்ள புதிய கட்டடம் எழுப்பப்பட்டது. 1978 இல் இந்த சபை ஒரு ஆங்கில மொழியை மாத்திரம் கொண்ட சபையாக இயங்கி வந்தது. ஆனால் தேவன் தமது "கிருபையில்" அவரது சபையை வளரச்செய்தார். இன்று எம்மத்தியில் ஒவ்வொரு மொழிக்கும் பொறுப்பான ஒரு ஊழியருடன் மூன்று மொழிகளைப் பேசும் ஒரே சபையாகக் காணப்படுகின்றது. தேவனுடைய கிருபையால் பலர் அவரை அறியும் அறிவிற்குள் வழிநடத்தப்பட்டுள்ளனர். இதனால் இந்த சமூகம் இந்த பகுதியில் நம்பிக்கையையும் தேவ சமாதானத்தையும் கொண்டுவரும் ஒளிவீசக்கூடிய ஒரு கலங்கரை விளக்காக விளங்குகிறது.

எங்கள் தனித்துவம்

  • கிருபை வேதாகம சபையானது வேதவசனங்களை விளக்குகின்றதும் பிரசங்கிப்பதும் மற்றும் கற்பிப்பதுமான வேதவசனங்களை அடிப்படையாகக் கொண்ட ஊழியமாகும். எனவே‚ எங்கள் ஆராதனை வழிபாட்டு செயற்பாடுகள் - அதாவது பாட்டுக்கள்‚ வாசிப்புக்கள் மற்றும் ஜெபங்கள் - அனைத்தும் ஆராதிப்பவர்களைத் தேவனுடைய செய்தியை பெற்றுக்கொள்ளக் கூடியவாறு தயார்செய்யும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது.

  • கிருபை வேதாகம சபையினரான நாங்கள் அப்போஸ்தலர் 2 மற்றும் 1கொரிந்தியர் 12இல் கூறப்பட்டவாறு திருச்சபை வாழ்வின் குணாதிசயங்களைப் பின்பற்றினவர்களாக இருக்கிறோம். மேலும் தேவனுடைய கிருபையின் முலம் எம்மாற் கூடியமட்டும் இந்த அடிப்படைகளைப் பின்பற்ற முயற்சி செய்கின்றோம்.

  • நாம் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த 1689 பாப்டிஸ்ட் விசுவாச அறிக்கையை எமது விசுவாச அறிக்கையாக ஏற்றுக்கொணடிருக்கிறோம். நமது வாழ்வின் அனைத்து பகுதியும் நம்முடைய பிதாவாகிய கர்த்தரால்; நமக்கு பரிசாக வளங்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் பரிசுத்தத்துடன் அவரது மகிமைக்காகவும் மற்றும் அவரது படைப்பின் ஆசீர்வாதத்திற்குமாக வாழப்பட வேண்டும் என்பதை உறுதியாக நம்புகிறோம்.

போதகர்கள்

  • “ அஜித் பெரேரா ஆங்கிலிகன் சபையைத்தழுவிய ஒரு குடும்பத்தில் மார்ச் 29 ஆம் 1959 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் கொழும்பு 00300 புனித தோமஸ் ஆரம்பப்பள்ளியில் அவரது ஆரம்பக் கல்வியை கற்றார். பின்பு குடும்பத்தினர் மிகச் சிறந்த பள்ளி என்று நம்புகிற கண்டி திரித்துவக் கல்லூரியிலே தனது படிப்பைத் தொடர்ந்தார். இவர் North American Baptist College (Latterly Taylor University College) of Edmonton, Canada வின் ஒரு மாணாக்கனும் ஆவார் போதகர் அஜித் பெரேரா

  • “ ஆயிரத்தித்தொளாயிரத்து எண்பதுகளின் முற்பகுதியில் தேவனுடைய கிருபை பெனட்டை ஆட்கொண்டது. அவர் 1981 இல் கிருபை வேதாகம சபையில் ஆராதிக்கத் தொடங்கினார். பின்பு 1988ல் அதன் மூப்பர்களில் ஒருவரானார். இவர் Wales Evangelical School of Theology யின் ஒரு பட்டதாரியுமாவார். பெனட் மற்றும் அவரது மனைவி எஸ்தர் இருவருக்கும்; பிலிப் மற்றும் ஆண்ட்ரூ எனும் இரண்டு மகன்மார் உள்ளனர். இவரது நாட்டங்கள் பிரதானமாக இறையியல், தத்துவவியல், அரசியல், பண்பாடு மற்றும் நடப்பு விவகாரங்கள் என்பவையாகும். போதகர் பெனட் சுரேந்திரன்