திருச்சபையின் நிகழ்வுகள்

மூன்று மொழிகளிலும் நடாத்தப்படும் ஞாயிறு ஆராதனையே எமது நிகழ்வுகளின் மையமாகும். இவற்றில் எப்போதும் வேதாகம முறைப்படியான வழிபாடு மற்றும் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கித்தல் என்பன மூலம் தேவனை மகிமைப்படுத்த முனைகிறௌம். இவ்வழிபாடுகளில் ஞானப்பாட்டுக்கள் பாடப்படுகின்றனஇ வேதாகமம் வாசிக்கப்படுகிறது, பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்படுகின்றன. காணிக்கைகள் தேவனுடைய இராஜ்ய வேலைகளுக்காகச் செலுத்தப்படுகின்றது. மேலும் ஒவ்வொரு ஆராதனையின் பெரும்பகுதி தேவனுடைய வார்த்தையை பிரசங்கித்தலுக்குக் கொடுக்கப்படுகிறது. இவையே முறையான வழிபாட்டு முறையின் அடிப்படைக் கூறுகள் என நாம் நம்புகிறோம்.

அனைத்து ஆராதனைகளையும் ஆர்வமூட்டுவதாகவும் அர்த்தமுள்ளதாகவும் செய்ய முயலுகிறோம், மாறாக வெறுமனே மகிழ்விப்பதற்காக பொழுதுபோக்கு அம்சங்களை ஆராதனையில் நாம் புகுத்துவதேயில்லை. . ஆராதனைகள் அர்த்தமுள்ளதாகவும் சிக்கலற்றதாகவும் அமைவதற்கு இவை நாட்டின் மூன்று மொழிகளிலும் நடாத்தப்படுகின்றன. காலத்துக்குக் காலம் மூன்றுமொழி சபையினரும் ஒன்று கூடி வழிபடுவதற்கு சிறப்பு ஆராதனைகள் நடாத்தப்படும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரார்த்தனைக் கூட்டங்கள் மற்றும் வேதப்படிப்புக்கள் ஒவ்வொரு வாரமும் நடைபெற்று வருகின்றன. இவற்றில் சில தேவாலய வளாகத்திற்குள் மற்றும்; வீடுகளில் நடைபெறுகின்றன.

கூட்டு ஆராதனை:

ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று சமூகங்களும் அதாவது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஒன்றாகக்கூடி, வழிபட்டு மற்றும் வேதப்படிப்பு, ஜெபத்திற்காக இணைந்து ஒரு கூட்டுவழிபாடாக ஆராதனை நடாத்தப்படும். இந்த கூட்டுவழிபாட்டு ஆராதனையைத் தொடர்ந்து, ஒரு ஒன்றுபட்ட இணைந்த ஜெப நேரமும் அதைத் தொடர்ந்து சந்தோசமான ஐக்கியத்தைப் பகிர்ந்துகொள்ளுகின்ற ஒரு கூட்டு உணவு ஐக்கியமும் நடைபெறும்.

கூட்டு ஆராதனையை நடாத்துவதன் நோக்கங்கள்:

 • கிறிஸ்துவுக்குள் நம்முடைய ஒருமைப்பாட்டை ஏற்றுக் கொள்வதும், நாம் முதன்மையாக தேவனுடைய குழந்தைகள் என்றும் அதற்கு அடுத்தே நாம் பல்வேறு இனக்குழுக்களைச் சார்ந்தவர்கள் என்றும், கலாத்தியர் 3:28 இற் கூறப்பட்ட பிரகடனத்தை உறுதிப்படுத்தல்.
 • அவரது நம்பிக்கையில் திருச்சபை முழுவதும் ஒன்றாக வளருவதை உறுதிப்படுத்தல்.
 • நம் நாட்டின் பன்முகத்தன்மையின் மத்தியில் உண்மையான ஒற்றுமையைப் பராமரிக்க முடியும் என்ற உண்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருத்தல் என்பதற்காகவுமேயாகும்.

ஓய்வுநாட் பாடசாலை

ஒவ்வொரு ஞாயிறும் நம் குழந்தைகளுக்காக ஒரு ஒருங்கிணைந்த ஓய்வுநாட் பாடசாலை நடாத்தப்படும் (காலை 11.15-க்கு ஆரம்பித்து நண்பகல் 12 மணி வரை). இங்கு பாடங்கள் மூன்று மொழிகளிலும் கற்பிக்கப்படுகின்றது. இது எங்கள் பிள்ளைகளின் மத்தியில் இனம் தொடர்பான தடைகளை உடைத்தெறியும் முயற்சியாகும். இதன்மூலம் இச்சிறியவர்கள் இந்த பன்முகத்தன்மையுள்ள சமூகத்தில் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்து ஐக்கியத்துடன் வாழ்வதன்மூலம் இச்சமூகத்திற்கு வழிகாட்டிகளாகத் திகழ முடியும்.

இந்ஞாயிறு பாடசாலையில் மூன்றரை வயது முதல் 17 வயது வரையான பிள்ளைகள் உள்ளடக்கப்படுகின்றனர். ஓய்வுநாட் பாடசாலையின் பாடத்திட்டம் "Lessons for Life" authored by Mrs. Jill Masters of the Metropolitan Tabernacle, London, England. அப்புத்தகத்தின் தமிழாக்கம் “வாழ்வுதரும் வார்த்தைகள்” என்ற பெயரில் எமது சபையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

Church pic

வேதப்படிப்பு :

வாராந்த வேதப்படிப்புக்களில் நாம் வாழும் அன்றாட வாழ்க்கையில் எதிர்நோக்கும் பல்வேறு சமூக கரிசனைகளுக்கு தேவனுடைய வார்த்தைகளை ஆராய்ந்து விடைகாண முயல்கின்றோம். வாராந்த வேதப்படிப்புக்கள் வெவ்வேறு மொழிகளில் நடைபெறும். மற்றும் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை எங்கள் திருச்சபை மூன்று சமூகங்களும் ஒன்றாகச் சேர்ந்து வேதப்படிப்பை நடத்துகின்றனர்.

வாராந்த வேதப்படிப்புக்கள்:

 • ஆங்கிலம் - ஞாயிறு ஆராதனைக்குப் பின்னர் - 10.45முதல் - 12 மணி வரை
 • தமிழ் - ஞாயிறு ஆராதனைக்குப் பின்னர்- 10.45 முதல் 11.15வரை-
 • சிங்களம் - வீட்டு வேதப்படிப்பாக: - செவ்வாய்க்கிழமைகளில் (18.30) கோட்டேயிலும் 2 வது மற்றும் 4 வது புதன்கிழமைகளில் (18:15)கல்கிசையிலும் நடைபெறும்.

கர்த்தருடைய நாள் கால அட்டவணை

 • ஞாயிற்றுக்கிழமை ஆராதனை:

 • கூட்டு ஆராதனை:

  ஒவ்வொரு மாதத்தின் முதலாம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஆராதனை இடம்பெறும்.

 • மற்றய அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆராதனைகள்,

 • தமிழ் - காலை 8.15

 • சிங்களம் - காலை 8.30

 • ஆங்கிலம் - காலை 9.30

 • ஓய்வுநாள் பாடசாலை:

  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆங்கிலம், சிங்களம், மற்றும் தமிழில் 11.15 மணிக்கு.

 • வேதப்படிப்பு

 • தமிழ் - காலை 10.45 மணிக்கு

 • ஆங்கிலம் - காலை 10.45 மணிக்கு

 • ஜெபக் கூட்டங்கள்

 • தமிழ் - காலை 7.05 மணி முதல் 7.50 வரையும் மற்றும் 10.05 முதல் 10.40 வரையும்

 • சிங்களம் - காலை 10.45 மணிக்கு