Sermon Notes and Recordings

நமது நிமித்தம் சொற்பகாலம் தேவ தூதரிலும் சிறியவராக்கப்பட்ட கர்த்தராகிய இயேசு.

Jesus – Made ‘a little while’ lower than the Angels

(எபிரேயர் 2:5-18)

5இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை. 6ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும் மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்? 7அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர் மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் அவனை அதிகாரியாக வைத்து சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான். 8சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற விஷயத்தில் அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை அப்படியிருந்தும் இன்னும் அவனுக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக் காணோம். 9என்றாலும் தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.

முன்னுரை

எபிரேயர் இரண்டாம் அதிகாரத்தின் ஐந்தாம் வசனமானது அதற்கு முன்பேசியவற்றையும் இனிப்பேசப்போவற்றையும் இணைக்கின்ற வசனமாகக் காணப்படுகிறது. முதலாம் அதிகாரத்தில் இயேசுவானவர் தேவ தூதரிலும் மேலானவர் என்று கூறப்பட்ட எபிரேய நிருபத்தை ஆக்கியோனின் வாதப்படி இயேசுவானவர் தேவகுமாரன் என்று பார்த்ததை இது எமக்கு நினைவுபடுத்துகிறது. ஏற்கனவே நான் கூறியதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். கடைசிகாலத்தில் தேவ இராஜ்யத்தில் பிரதான தூதனாகிய மிகாவேல் பிரதான பங்கெடுப்பார் எனவும் இரண்டு மெசியாக்கள் தோன்றுவர் எனவும் அவர்களில் ஒருவர் இராஜா மற்றவர் ஆசாரியன். இவர்கள் இருவரும் மிகாவேல் தூதனுக்கு கீழ்ப்பட்டிருப்பர் என்பதுவும் யூதர்கள் மத்தியில் காணப்பட்ட தவறான உபதேசம். அந்த நாட்களில் காணப்பட்ட இந்த நம்பிக்கை இன்றுள்ள ஜெகோவாவின் சாட்சிகளின் சில நம்பிக்கைகளோடு ஒத்துப்போகிறது.

ஆனால் இந்த ஐந்தாம் வசனம் என்ன சொல்கிறது: 5இனிவரும் உலகத்தைக் குறித்துப் பேசுகிறோமே அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை. இனிவரும் உலகத்தை தூதர்களைவிட மேலானவருக்குக் கீழ்ப்படுத்தியுள்ளார். அவரது மேன்மை என்னவென்றால் அவர் தேவ குமாரன் மாறாதவர் அவரது ஆண்டுகளுக்கு முடிவில்லை. இதைத்தான் முதலாம் அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம். இவை மட்டும்தான் அவரது மேன்மையல்ல. இரண்டாம் நிருபமானது அவர் தேவதூதரிலும் கீழாக்கப்பட்டதும் ஒரு மேன்மையான நிலையே என்பதைக் காட்டப்போகிறது. 9என்றாலும் தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். முதலாம் நிருபத்தில் அவரது தெய்வீக நிலையானது பழைய ஏற்பாட்டு மேற்கோள்களின் துணையோடு விரிவாக எடுத்துக் காட்டப்பட்டது. இங்கு அவர் எமது மனுஷீகத்தோடு தன்னைப் பகிர்ந்து கொள்ளும் மேன்மையும் அதே பழைய ஏற்பாட்டிலிருந்தே எடுத்துக் காட்டப்படுகின்றது.

மனிதனைப் படைத்தபோது தேவதூதரைப் பார்க்கிலும் சிறியவனாக அவனைப் படைக்கவில்லை என்றே நான் இதுவரை நம்புகிறேன். எல்லா சிருஷ்டிக்கும் மேலான நிலையில் மனிதன் படைக்கப்பட்டு படைக்கப்பட்டவற்றை ஆண்டுகொள்ளுமாறு கேட்கப்பட்டிருந்தான். அதில் அவன் தவறியதன் பின்னரே மரணம் வந்தது. ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிடப்பட்டான். அவன் காக்க வேண்டியதை இப்போது தேவ தூதர்கள் காக்கும்படி வைக்கப்பட்டனர். மனிதன் பாவம் செய்து தேவனைவிட்டு பிரிந்ததாலும் மரணத்திற்கு உட்பட்டதாலும் அவனது நிலை தேவ தூதரிலும் சிறுமையாக்கப்பட்டது. அதற்கு முன் மனிதனுக்கு தேவ தூதர்கள் பணிவிடை செய்தனர். இன்றும் இரட்சிக்கபட்டவர்களுக்கு தேவ தூதர்கள் பணிவிடை செய்கின்றன என்று வேதம் கூறுகின்றது (எபி.1:14).

(1) இனிவரும் உலகத்தை இன்றைய சமூகம் எவ்வளவாய் நம்புகிறது? (வச.5)

இதுவே கிறிஸ்தவர் பலருக்கும் உள்ள பிரச்சனையாயுள்ளது. ஏனென்றால் எம்மைச்சூள இனிவரும் உலகைக் குறித்து நம்பிக்கையற்ற மக்கள் வாழ்கின்றனர். அவர்களது நம்பிக்கையற்ற நடவடிக்கைகள் எமது நம்பிக்கைக்கு ஊக்கமளிக்கவில்லை. பௌத்தர்கள் இவ்வுலகோடு தமது வாழ்க்கை முடிந்துவிட்டால் அதுவே உன்னத நிலையாக கொள்கின்றனர். இந்துக்கள் சொர்க்கத்தைக் குறித்துப் பேசினாலும் அதில் பிரவேசிப்பதற்கான எந்த உத்தரவாதத்தையும் பெற்றவர்களாக இல்லை. தேவர்களாய் மாறுவற்கு அவர்கள் இன்னும் எத்தனை பிறப்பெடுக்க வேண்டும்? அது எதில் நிறைவடையுமென நிச்சயமற்றவர்களாய் வாழ்கின்றனர். இஸ்லாமியர் பரலோகத்தைக் குறித்த ஒருவித வேடிக்கையான நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும் இந்தப்பூமியை இஸ்லாமிய மயப்படுத்துவதே அவர்களது நிகழ்ச்சி நிரலில் முதலிடம் பெறுகிறது.

கிறிஸ்தவர்களாகிய எமக்கு இனிவரும் உலகைக் குறித்த எதிர்பார்ப்பிற்கு உற்சாகம் அளிக்கத்கவர்கள் நம்மைச்சூள அதிகமாயில்லை. சிலசமயம் நாம் அறிந்த தெரிந்த கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறைகூட இந்த நம்பிக்கையை வலுப்படுத்துவதாக அமையாதிருக்கலாம். அதனால்தான் தேவனுடைய வார்த்தை எமக்கு மிகவும் அவசியமாயுள்ளது. உலகம் இயேசுவாவருடைய சத்தத்துக்கு செவிசாய்க்கவில்லை என்றாலும் விசுவாசிகளாகிய நீங்களும் நானும் அதற்கு தீவிரமாய் செவிகொடுக்கிறோமா?

(2) மனுஷ குமாரனின் நிலை (வச.6-7)

மனிதர்களாகிய எமது நிலை பாவத்திற்கு முன்னரும் பாவத்தின் பின்னரும் வேதத்தின் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த இடத்திலே சங்கீதக்காரனின் (8:4-6) வார்த்தைகள் எவ்வாறாக மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. அதை இயேசுவானவரின் ஒளியில் அதாவது புதிய ஏற்பாட்டு வெளிச்சத்தில் பார்க்கையில் அவை எமக்கு என்னத்தைக் கற்பிக்கின்றன? ஆண்டவரின் மேன்மையைச் சிந்திக்கின்றபோது அதில் மனித குமாரனின் நிலை என்ன என்று சங்கீதக்காரன் சொன்னதை இந்த சங்கீதத்தினூடாக பரிசுத்த ஆவியானவர் எபிரேய புத்தகத்தை எழுதியவருக்கு நினைவுபடுத்துகிறார். படைப்பின்போது சகலதையும் மனிதனுக்கு கீழ்ப்படுத்தினார். அது நம் எல்லாருக்கும் தெரியும். ஆதன் பின்னர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சென்றபின் மீண்டும் தாவீது எல்லாவற்றையும் மனுஷனுக்கு கீழ்ப்படுத்தியதாக கூறுகிறாரே ஆனால் யூதர்களின் நம்பிக்கைப்படி நிலைமை அவ்வாறில்லையே இதுவே எபிரேய ஆசிரியரின் ஆதங்கமாயிற்று. எனவே சங்கீதக்காரன் இங்கு சொல்கின்ற ‘மனிதன்’ கர்த்தராகிய இயேசுவையே என்பதை எபிரேய நிருபத்தின் வெளிச்சத்தில் எட்டாம் சங்கீதம் நிச்சயப்படுத்துகின்றது.

ஆண்டவரின் கரத்தின் கிரியைகளாகிய வானங்களையும் அவர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் பார்க்கும்போது மனுஷனை நினைக்கிறதற்கு அவன் எம்மாத்திரம் என்று எண்ணத்தோன்றுகின்றபோது தேவன் அவனை நாம் எண்ணுவதற்கு மேலாக மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்தார். மற்ற சிருஷ்டிகள் எல்லாவற்றின் மேலான ஒரு நிலையை அவனுக்கு ஏற்படுத்தினார். இயற்கை ஒழுங்கைப் பேணுகின்ற பொறுப்பு அவனிடம் கையளிக்கப்பட்டது. ஆனால் அவன் அந்தப் பொறுப்பை கீழ்ப்படிந்து செய்யவில்லை. அதுவே இன்று நம்மைச் சூளவுள்ள எல்லா அவலங்களுக்கும்: (வேலைப் பழு சூழல் உஷ்ணம் நோய் சமாதனமின்மை போன்ற இன்னோரன்ன) காரணம் என்பது நாம் யாவரும் அறிந்ததே. ஆனால் தேவன் அதனால் சோர்ந்து போகவில்லை வீழ்ச்சியடைந்த மனிதனுடைய வாழ்விற்கூடாகவும் தமது வல்லமையை காட்ட வல்லவர் என்பதை தனது குமாரனுக்கூடாக தெரியப்படுத்துகிறார். ஆனால் அது படைப்பைப் போல் இலகுவானதாக இருக்கவில்லை. மனிதனுடைய பாவம் நீந்நப்பட்டால்தான் மனிதன் தேவனுடன் மீண்டும் நித்தியமாக நிம்மதியாக அல்லது சமாதானமாக சந்தோஷித்து வாழ முடியும். அதனை இந்தப் பூமியில் நாம் முன் ரூஷித்தபோதும் இனிவரும் உலகில்தான் அதை நிறைவாக அனுபவிக்க முடியும்.

(3) நாம் இனி பிரவேசிக்கவுள்ள உலகம்

இனி வரும் உலகிற்குள் ஏன் எல்லா மனிதரும் பிரவேசிக்க முடியாது? பாவம்தான் அதற்கான காரணம் என்று நாம் அறிந்துள்ளபோதும் அதை தேவன் எவ்வளவு பாரதூரமாகதாக பார்க்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மனிதன் பாவத்தினால் வந்த எல்லா சாபத்திற்கும் எதிராக தான் வெற்றி கொள்ள முனைகிறான். நேற்றி வியர்வை சிந்தி உழைப்பதற்கு மாறாய் குளிரறைக்குள் (A/C) குதூகலிக்க முனைகிறான். கர்ப்ப வேதனையைப் போக்க முள்ளந்தண்டில் ஊசியைப்போட்டு உணர்வை விறைக்கச் செய்து நோவற்ற விதமாக சத்திர சிகிச்சையால் மகப்பேற்றை கொண்டாட முனைகிறான். முள்ளையும் குருக்கும் விளையும் விளையும் பூமியை - அகன்ற இலை ஒடுங்கிய இலைக் களைநாசினி கொண்டு அழித்தொழித்து அறுவடையை ஆசீர்வாதமாக்குவேன் என்கிறான். இவையெல்லாம் கொண்டு வந்த பக்க விளைவுகளை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

பாவம் தேவனுடைய உள்ளத்தை எவ்வளவாய் நோகடித்தது என்பதை எண்ணிப்பார்க்க மறுக்கிறான். இந்த தேவ வசனங்கள் அதனை எமக்கு அதிகமாய் உணர்த்தக்கூடும்: “தேவனுடைய வார்த்தாயாயிருந்து மாம்சமான தேவசுதன் கெத்சமனே பூங்காவில் முழங்காலில் நிற்கிறார். ஜெபநிலையில் தேவனுடன் போராடுகிறார். அவரது வியர்வை இரத்தத்தின்படியன்று உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று வியாகூலத்துடன் கதறுகிறார்.” எபி.2:5-9 வரையான வசனங்களில் இயேசுவானவர் மனிதாக வந்ததன் காரணமாக இனிவரும் உலகிற்குள் மனிதர் பிரவேசிக்க ஏதுவாயிற்று என்கிறார்.

இனிவரும் உலகிற்குள் நாம் பிரவேசித்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமாயின் நாம் பரிசுத்தமாக்கப்பட வேண்டும். நம்மை தேவனுக்கு முன்பாக நீதிமான்களாக்கவும் மறுபடி பிறக்கச் செய்யவும் நாம் எந்தப்பங்கும் வகிக்க முடியாது. ஆனால் தேவனால் பரிசுத்தமாக்கப்படுகின்ற காரியத்தில் தேவன் எமது கீழ்ப்படிவை எதிர்பார்க்கிறார். ஜே.சி ரைல் அடிகளார் கூறியதாவது:

பரிசுத்தமாகுதல் என்பது எப்போதும் வளர்ந்து முன்னேறக்கூடிய காரியம். ஒரு கிறிஸ்தவன் முதலில் விசுவாசிக்கப்பட்டபோது மன்னிக்கப்பட்டதைவிட காலப்போக்கில் அதிகமாக மன்னிக்கப்படவோ அதிக நீதிமானாகப்படவோ முடியாது. ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அவன் அதிகம் பரிசுத்தவானாக்கப்பட முடியும். தேவனுடைய பரிசுத்தவான்கள் அனைவரும் இதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.

நாம் பரலோகத்திற்கு ஆயத்தப்படுவதற்கு பரிசுத்தம் அவசியம் என்று கூறும் ரைல் அடிகளார் தனது நூலில் மேலும் கூறியிருப்பது:

பலர் தாங்கள் சாகும்போது பரலோகத்திற்கு போவோம் என்ற நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பரலோகம் அவர்கள் அனுபவிக்கக்கூடிய சந்தோஷமான இடமாக இருக்குமா என்பதைக் குறித்து அவர்கள் சற்றும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. பரலோகம் என்பது அடிப்படையில் பரிசுத்தமான இடம் - அங்கே இருப்பவர்களும் அவர்கள் செய்பவைகளும் பரிசுத்தமானது. அங்கே நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமெனில் நாம் இவ்வுலகில் இருக்கும்போதே அதற்கென்று ஆயத்தப்பட வேண்டும். ஆட்டு மந்தை தண்ணீரில் வாழமுடியுமா? மத்தியான வெயிலில் ஆந்தை ஆனந்தப்படுமா? மீன் தரையில் வாழமுடியுமா? அப்படியென்றால் பரிசுத்தமடையாத மனிதன் எப்படி பரலோகத்தில் மகிழ்வுடன் வாழமுடியும்?

கலதாரி ஹட்டலுக்குள் அழுக்கான உடையுடன் சென்றுவிட நேரிட்டால் எப்படியான அவமானத்தை எமது உள்ளம் சந்திக்கும். அவரைத் தரிசிக்கும்போது அவரைப்போல் மாறுவோமேயொளிய அவரைபபோல்; பரிசுத்தராகிவிடுவோம் என்று வேதம் கூறவில்லையே. சிலவேளைகளில் சில கடினமான பயிற்சிகள் ஆவிக்குரிய வாழ்வில் ஏற்படுகின்றபோது நாம் சில வசனங்களுக்கு எமக்கேற்றபடி விளக்கம் ஏற்படுத்தி சமாதானமடையப் பாரக்கிறோம். அப்படியாயின் ஏன் கர்த்தர் கிருபையின் சாதனங்களான வேதப்படிப்பு திருவிருந்து சபைகூடுதல் ஜெபம் ஐக்கியங்கள் போன்றவற்றை நாம் தொடர்ந்து கைக்கொள்ளும்படி கட்டளையிட்டார்?

கடவுளின் சாயலை இழந்த மக்களாகிய நாம் கடவுளின் சாயலைத் தரித்துக் கொள்ளும்படியே இவை யாவும் தரப்பட்டுள்ளன.

கடவுளின் சாயல் என்றால் என்ன? “இங்கு புறத்தோற்றம் பற்றிப் பேசப்படவில்லை கடவுள் ஆவியாயிருக்கிறார். மனிதன் சரீரத்தையும் ஆவியையும் உடையவனாயிருக்கிறான். கடவுள் தனது ஆவியைப்போல் மனிதனின் ஆவியையும் படைத்ததாக வேதம் குறிப்பிடவில்லை. கடவுள் தமது சாயலாக அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார் என்றே கூறுகிறது. எனவே சாயலாக என்பதை நாம் புரிந்துகொண்டால் அது எமது ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் உதவியாயிருக்கும். அமைதியான மேகமற்ற இரவில் சந்திரனின் சாயலை ஒரு குளத்தின் நீரில் காணலாம். காற்றால் அலைகள் ஏற்படாதவரை அதன் சாயல் நீரில் தெளிவாகவும் அழகாகவும் காணப்படும். ஆனால் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே மேகம் வர நேரிட்டால் சந்திரனின் சாயல் மறைந்துபோகும். தண்ணீரில் அலைகள் ஏற்பட்டாலும் சாயல் சிதறுண்டு வளையும். குளத்தில் காணப்பட்ட சந்திரனின் சாயல் குளத்திற்கு சொந்தமானதல்ல. அதே போல் கடவுளின் சாயல் மனிதனுக்கு சொந்தமானதல்ல. சந்திரனுக்கும் தண்ணீருக்கும் நெருங்கிய ஒரு தொடர்பு இருந்தால்தான் சந்திரனின் சாயல் தண்ணீரில் காணப்படும். இத்தொடர்பு உடைந்தால் சந்திரனின் சாயல் மறையும். இந்த உவமை மனிதனிலுள்ள கடவுளின் சாயலைத் தெரிந்துகொள்ள சற்று உதவும். இதுவே மனிதனுக்கும் மற்றைய உயிரினங்களுக்கும் உள்ள வேறுபாடாகும். நாயின் நாய்த்துவம் நாயிலிருக்கிறது. மனிதனின் மனிதத்துவம் மனிதனுக்குளில்லை. அது அவனுக்கும் கடவுளுக்குமுள்ள தொடர்பிலிருக்கிறது. அத்தொடர்பு அழிவுறுமாயின் அவன் மனிதனாயிராது மனிதத்துவமற்ற மிருகமாகிறான்”. அதனையே நாம் விஞ்ஞான வளர்ச்சியை தேவனுக்கு மகிமையாய் பாவிக்காத மேற்குலகில் நாம் காண்கிறோம்.

“கடவுளிடத்தில் அன்புமிக்க நம்பிக்கையும் கீழ்படிதலுமாகிய தொடர்போடு வாழ்வதிலும் கடவுள் அவன்மீது கொள்ளும் அன்பிலுமே மனிதனின் மனிதத்துவம் அடங்கியுள்ளது. மனிதன் கடவுளைவிட்டு தூரமாக விலகுகின்றபோது அத்தெய்வ சாயல் சிதைவுண்டு அழிகிறது. கடவுள்தாமே மனிதனைவிட்டு விலகுவதாயிருந்தால் கடவுளின் சாயல் முற்றும் அழியும். மனிதன் மனிதனாக இருக்க முடியாது.”

“இவ்விதமாக அன்பில் அன்பினால் அன்பிற்காக மனிதன் படைக்கப்பட்டான். எனவே இதுதான் அவன் இயல்பு. அவன் உயிர்வாழ ஆதியும் அந்தமும் தோற்றமும் முடிவுமாயிருப்பது அன்பே. எனவே மனிதன் தனித்து வாழ முடியாது.” ஆகவே தனித்து வாழ்பவர்களைக் குறித்து மிகுந்த கனிவாய் நாம் அணுக கற்றுக்கொள்வது அவசியம்.

யாவற்றுக்கும் அன்பு காரணமாயிருக்கிறது. “அதனால்தான் தனது சாயலாக மனிதனைப் படைத்தார் என்று சொல்கின்ற வசனம் ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார் என்று தொடர்ந்து கூறுகிறது. தனியாளாக மனிதன் கடவுளின் சாயலைத் தன்னில் பிரதிபிம்பிக்க முடியாது. ஏனெனில் கடவுள் ஒரு தனியாளல்லர். அவர் ஆள்தத்துவமுடையவர். அவர் பிதா குமாரன் பரிசுத்ததவி என்ற திரித்துவர். அருளப்படுவதும் பெறப்படுவதுமே அன்பின் பரிபூரணம். அன்பின் முழுமை தனியாளில் மட்டும் நிலைத்திருக்க முடியாது. ஆதலால்தான் கடவுள் மனிதனைத் தனது சாயலாகப்படைத்தபோது அணும் பெண்ணுமாகப் படைத்தார். எனவே மனிதனின் அமைப்பிலேயே அன்பின் தேவையையும் அன்பு கூரும் சாத்தியத்தையும் கடவுள் அமைத்துள்ளார்.”

முடிவுரை

இப்போது இயேசுவானவர் ஏன் சொற்பகாலம் தேவதூதரிலும் சிறியவராக்கப்பட்டார் என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். பிரியமானவர்களே நம்மைச் சுற்றியுள்ள உலகத்தார் இனிவரும் உலகத்தைப்பற்றி எதையும் அறியாதவர்களாக அதற்குள் பிரவேசிக்க தம்மை ஆயத்தப்படுத்த வேண்டிய அவசியமற்றவர்களாக வாழ்கின்றனர். இயேசுவானவர் தாம் அன்பு கூர்ந்தவர்களை இனிவரும் உலகிற்குள் பிரவேசிக்கச் செய்யவும் அதற்காக ஆயத்தப்படுத்தவும் மனிதனாகி சிலுவையின் மரண பரியந்தம் தன்னைத் தாழ்த்திதன்னைப் பரிசுத்தப்படுத்தி எமக்கு ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தியுள்ளார். மூன்றவதாக நாம் பார்த்தது இனிவரும் உலகத்தைக் குறித்து நீங்கள் அதற்கான ஆயத்தத்தில் அதன்மீதான நிச்சயத்தில் எந்தளவு உறுதியாயுள்ளீர்கள்? தேவன் தாமே இன்று எம்மோடு பேசிய வார்த்தைகளுக்கூடாக உங்களையும் என்னையும் பலப்படுத்தி ஸ்திரப்படுத்தி நிச்சயத்தை தருவாராக! விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ணுவாராக!

Jesus – Made ‘a little while’ lower than the Angels

The message of Hebrews is that the Lord Jesus Christ is so great and glorious that nothing else can surpass him. In my last sermon I preached that how Jesus was superior in every way to angels. Today in our sermon passage tells that the Lord Jesus was made lower than the Angels. Is the Bible contradicting itself? We are going to meditate on the Hebrew 2:5. This verse of the chapter is a link between what has gone before and what is to follow. Why He was made lower the angels? What is your believe about the world to come? Are you clear in your mind about the world to come? You were call to inherit the world to come, how far faithful in you depend on Lord Jesus for sanctification process. We will find answers and help form the sermon today.

This was recorded on 09th of Sept, 2012

Preached by Arulchelvan in Tamil

Download / Listen - in MP3 format

Right click and save on the audio or pdf likns for you to keep then in your computer.