Sermon Notes and Recordings

The 1st Epistle to Thessalonians 1:1-10

இன்றிலிருந்து ஒரு சில வாரங்களுக்கு தெசலோனிக்கேயருடைய முதலாவது நிருபத்தை ஆராயவுள்ளோம்.

பவுலால் எழுதப்பட்ட நிருபங்களில் முதலாவதானதாக இந்நிருபம் கருதப்படுகின்றது. பிலிப்பியரைப்போல தெசலோனிக்கேய பட்டணத்து கிறிஸ்தவர்களும் பல சிறப்பியல்புகளைக் கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனாலும் பவுல் சென்ற இடங்களுக் கெல்லாம் அவனைப் பின்தொடர்ந்த யூத மார்க்கத்தார் பவுலடியாரையும் அவரது சக ஊழியக்காரரையும் குறித்துப் பலவிதமான ஆரோக்கியமற்ற வதந்திகளைப் பரப்பியதாலும் அத்துடன் தெசலோனிக்கியருடைய விசுவா சத்தையும் நன்னடத்தையையும் மேலும் மேம்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டமையினாலும் இந்நிருபம் எழுதப்பட்டது. இதற்கிணங்க முதல் மூன்று அதிகாரங்களிலும் பவுலடியார் சபையினருக்கும் சபையின் தலை மைத்துவத்திற்கும் இருக்கவேண்டிய பண்புகளை ஆராய்கின்றார். இம்முயற்சியானது சபைகளுக்குள் பொதுவாகக் காணப்படும் ஓர் முக்கிய பிரச்சினையை வெளிக்கொண்டுவருகின்றது.

சுவிசேஷத்தை விசுவாசிக்கும் சபைகளில் பொதுவாக ஒருவரையொரு வரைக் குறித்த எதிர்பார்ப்பு பல நன்மைகளையும் தீமைகளையும் உருவாக்குகின்றது. இவ் எதிர்பார்ப்பு ஆரோக்கியமான சூழ்நிலையில் சபைக்குள் தன்னம்பிக்கையையும் வளர்ச்சியையும் ஆரோக்கியமற்ற சூழ் நிலையில் குழப்பத்தையும் பகைமையையும் தோற்றுவிக்கின்றது. ஆகவே இன்றும் வரும் வாரமும் சபைத் தலைவர்கள் சபையினரிடமும்ää சபை யினர் சபைத் தலைவரிடமும் எதிர்பாக்கவேண்டியது என்ன என்பதை ஆராயவுள்ளோம்.

பவுலைப் பொருத்தமட்டில் சபைத் தலைவர்களுடைய எதிர்பார்ப்பு விசுவாசம்ää அன்புää நம்பிக்கை என்ற வட்டத்துக்குள் அடங்கும் என்பதை முதலாம் அதிகாரத்தினூடாகக் குறிப்பிடுகின்றார். மிகுதியானவற்றை செய்திவேளையில் அவதானிப்போம்.

This was recorded on 17th of June, 2012

Preached by Pas. Benet Surendran in Tamil

Download / Listen - in MP3 format

Right click and save on the audio or pdf likns for you to keep then in your computer.