Sermon Notes and Recordings

The 1st Epistle to Thessalonians 4:13-5:11

மரணத்தையும்ää மறுவாழ்வையும் குறித்து மனிதர்கள் மத்தியில் பலவிதமான எண் ணக்கருக்கள் உண்டு. இவற்றில் பெருவாரியானவை மிகவும் மூடத்தனமான மூட நம்பிக்கைகளாம். உதாரணமாக சைவத்தில் மரித்துப்போன கணவனுடன் மனைவி உடன்கட்டை ஏறுவதனூடாக கணவனும்ää மனைவியும் மறு உலகத்தில் தம்பதிக ளாக வாழ முடியும் என்று எமது மூதாதையர்கள் நம்பியிருந்தனர். இதைப்போல மரித்துப்போன தங்களது அரசர்களுக்கு மறு உலகில் பணிவிடை செய்வதற்காக மெசப்பொத்தேமியரும்ää எகிப்தியரும் அரசரது வேலையாட்களை விஷமிட்டுக் கொன் றனர். இவை போதாதென்று மரித்துப் போனவர்களுக்கு உணவளிக்கும் பழக்கமும்ää அவர்கள் தங்களுக்குப் பரீட்சயமான இடங்களில் காணப்பட்டார்கள் என்ற வதந்தியும் இன்றுவரை தொடர்வனவாகவே உள்ளது.

இவ்விதமான சூழ்நிலைகளில் கிறிஸ்தவர்கள் வாழும்போது இந்நம்பிக்கைகள் நிமித்தமாக அன்றும் இன்றும் பலவிதமான குழப்பங்களுக்கு உள்ளாகின்றனர். ஆகவே மரணத்தையும் மறுவாழ்வையும் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகின் றது என்பதை பவுல் கூறுகின்ற பிரகாரம் (அன்றியும்ää சகோதரரேää நித்திரையடைந்த வர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கி த்துää அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை) நாம் அறிந்திருத்தல் அவசியம். கார ணம் மரணமானது கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் மிக முக்கியமானதும்ää மெய் விசுவாசிகளுக்கு நிரந்தரமான ஓர் இடத்தை அமைத்துக் கொடுப்பதற்கான வாசலு மாகும். இதனால் மரணத்தினூடாக கிறிஸ்தவர்கள் பெற இருக்கின்ற மறுவாழ்வைக் குறித்த தெளிவையும் நம்பிக்கையையும் கொண்டிருத்தல் அவசியமாகும். உங்கள் மத்தியில் வாசிக்கப்பட்ட வசனங்களில் முதலாவது பகுதியில் (1தெச 4:13-18) கிறிஸ் தவர்கள் மரிக்கும்பொழுது நேரிடுகின்றது என்ன என்பதையும்ää இரண்டாவது பகுதி யில் (1தெச 5:1-11) கிறிஸ்தவர்கள் மரணத்தை சந்திக்குமட்டும் அல்லது கிறிஸ்து வானவரின் இரண்டாம் வருகைமட்டும் செய்யவேண்டியவை என்ன என்பதையும் இன்று ஆராயவுள்ளோம்.

The subject before us today refers to death, resurrection and the Second Coming, the corner stone of Christianity. An awareness of death, resurrection and the Second Coming is essential because these are sure things to take place in human lives. In the passage read to you Paul highlights the importance of knowing these matters. Ignorance of which had led many into confusion and others into an everlasting sorrow. He says: But we do not want you to be uninformed, brothers, about those who are asleep, that you may not grieve as others do who have no hope. History reminds an ignorance of these matters has led many people into various speculations and wild stories. In Hinduism we find widows were burned in the pyre to be with the dead husbands. Mesopotamians and Egyptians poisoned their servants to serve the dead king in afterlife. Such ignorance not only prevailed during Paul’s time even in ours. We hear of bogus testimonies that claim people visiting heaven and hell while they are still alive. Therefore as Paul reminds us here believers as we should know clearly about death, resurrection and the Second Coming. This means there are two frontiers before believers today. On the one hand believers have to fight against superstitions that surround death and afterlife then on the other side they should fill themselves with the positive aspects of these matters which help to cement the faith. The passsage naturally divides into two sections: what is to happen? (4:13-18) and what should be done? (5:1-11). In the first section Paul tells the Church how the afterlife is going to happen and in the second section the responsibility of those who are still alive.

This was recorded on 22nd of July, 2012

Preached by Pas. Benet Surendran in Tamil

Download / Listen - in MP3 format

Right click and save on the audio or pdf likns for you to keep then in your computer.